இன்றிரவு முதல் மீண்டும், பயணக் கட்டுப்பாடு
கடந்த மூன்று தினங்கள் தளர்த்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு மீண்டும் இன்றிரவு 10 மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக் கட்டுப்பாடு நேற்று முன்தினம் அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.
எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கின்றது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்கள் தொடர்பிலான குற்றம் உறுதி செய்யப்படும் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment