Header Ads



ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீதும், சாரதி மீதும் இளைஞர் குழு தாக்குதல்


வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு இளைஞர் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளனர். 

முருகனூர் பகுதியில் இன்று (12) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிதம்பரபுரம் பகுதியிலிருந்து வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை நோக்கி ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்திற்கு முருகனூர் விவசாய பண்ணைக் அருகே முகங்களை மறைந்தவாறு நின்ற இளைஞர் குழுவினர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

கல்வீச்சு தாக்குதலையடுத்து பேரூந்தினை சாரதி நிறுத்திய போது பேரூந்தினுள் புகுந்த அவ் இளைஞர் குழுவினர் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். 

குறித்த பேருந்தின் அனைத்து கண்ணாடிகளும் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஊழியர்கள் எவரும் பெருதளவிலான காயங்கள் எவையும் ஏற்படவில்லை. 

ஆடைத் தொழிற்சாலையினால் கொரோனா தொற்று பரவுவதாக வடமாகாணத்தில் பல பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் குற்றத்தடுப்பு பிரிவினரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அததெரண

No comments

Powered by Blogger.