Header Ads



நீர்கொழும்பில் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ள பிரபல கோடிஷ்வர வர்த்தகரின் உடல்

 


- Ismathul Rahuman -

பிரபல கோடிஷ்வர வர்த்தகரின் மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணை நடாத்திய பொலிஸார் சந்தேகத்தில் அவரது மனைவியையும், வீட்டில் வேலை செய்த வேலைக்காரனையும் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

சடலம் நாளை 30 திகதி விசாரணைக்காக தோண்டி எடுக்கப்பவுள்ளது.

நீர்கொழும்பு மீபுர டயர் சென்டர் உரிமையாளர் வர்ணகுலசூரிய சலிந்த பியதர்ஷன (49வயது) கடந்த அக்டோபர் 4 ம்திகதி மரணமடைந்தார். மரண விசாரணையில் தலையில் கட்டி ஒன்று வெடித்ததினால் மரணம் சம்பவித்தது எனது தெரிவிக்கப்பட்டிருந்தன.

சில காலத்திற்குப் பின் இம்மரணத்தில் சந்தேகம் நிழவுவதாக வர்தகரின் தாயாரும் சகோதர, சகோதரிகளும் பொலிஸில் முறைப்பாடு செய்து, விசாரணை நடாத்தி ஏதும் குற்றம் நடந்திருந்தால் உரியவர்களுக்கு தண்டனை வழங்குமாறு கேட்டிருந்தார்கள்.

நீர்கொழும்பு சிரே்ஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிக்கேரிவின் ஆலோசணையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாலக்க சேனாநாயக்கவின் கண்காணிப்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர், குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.எஸ். ஜயனாத் தலைமையில் மேற்கொண்ட புலன்விசாரணையில் வீட்டில் வேலைசெய்த முத்துசாமி பரமேஸ்வரன் நீண்ட விசாரணைக்கு உற்படுத்தப்பட்டார். வர்தகர் கட்டிலில் உறங்கிக்கொண்டிருக்கும் போது தலையனையை அவரது முகத்தில் மூச்சுவாங்க முடியாமல் அமில்திப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து கோடிஸ்வர வர்த்தகரின் மனைவியான புன்யா தீபானி அத்துகோரல அழைத்து விசாரிக்கப்பட்டார். அவர் எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரியவருகிறது. மனைவியையும், வேலையாலையும் சந்தேகத்தில் கைதுசெய்த பொலிஸார் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

வர்தகரின் பூடவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு போலவலான மையவாடிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவில் மீண்டும் விசாரணைக்காக பூதவுடல் நாளை 30 திகதி காலையில் பொலிஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.