Header Ads



இன்று நள்ளிரவு முதல், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு (முழு விபரம் இணைப்பு)


இன்று (11) நள்ளிரவு முதல் 12 முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 157 ரூபாவாகும். 

அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. 

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. 

மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 comments:

  1. இதிங் சனிபத

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. சிந்திக்கும் மக்கள் இல்லை என்று இந்த அரசு பொய் கணக்கு போடுது....
    எத்தனை கஷ்டம் குடுக்க முடியுமோ குடு....
    உனக்கு 33 ஆயிரஙகோடியை வசூல் பன்ன உன் திட்டம் சரி என்று நினைக்கிறாயா???
    இந்த நாட்டில் பதிவுகள் படி 51 லட்சம்.... இவர்களில் எத்தனை குடும்பங்கள் வாகனங்கள் உள்ளவர்கள் என்று உங்களுக்கு தெரியும்....
    நீங்கள் வசூல் பன்னும் இந்த 20/= ஒரு வாரம் போதும் பல கோடி சம்பாதிக்க....
    மக்கள் கஷ்டம் நிச்சயமாக உங்களுக்கு சாபம்.....
    எந்த திட்டமும் இல்லாத உங்களிடம் 69 லட்சம் மக்கள் வாக்கு கொடுத்தது எதற்காக????

    ReplyDelete

Powered by Blogger.