நான் ஒரு நேர்மையான கடின உழைப்பாளி, முழு வாழ்க்கையிலும் எந்தத் தவறும் செய்யவில்லை - அல் ஜசீராவிடம் ஷானி தெரிவிப்பு
குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளரான ஷானி அபேசேகர, தொழில் அதிபர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில், முன்னாள் துணை காவல்துறை கண்காணிப்பாளர் வாஸ் குணவர்தன, அவரது மகன் மற்றும் நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் பொய்யான சாட்சிகளை முன்னிலைப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அவர் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டார். எனினும் மேன் முறையீட்டு நீதிமன்ற தலையீட்டால், சில நாட்களுக்கு முன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
"இந்தநிலையில் உண்மை மேலோங்கும் என்று ஷானி அபேசேகர அல் ஜசீராவிடம் செய்தி சேவையிடம் கூறியுள்ளார். தாம் ஒரு நேர்மையான மற்றும் கடின உழைப்பாளி. தாம் முழு வாழ்க்கையிலும், எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தங்கள் மனசாட்சிக்கு ஏற்ப வாழ்பவர்கள் எதையும் எதிர்கொள்வது கடினம் அல்ல. அவர்கள் ஏதாவது தவறு செய்தால், அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள் என்றும் ஷானி அபேசேகர கூறியுள்ளார்.
இதேவேளை ஷானி அபேசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து அல் ஜசீராவிடம் கருத்துரைத்த, இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு, இலங்கையின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி எவ்வளவு வலுவானது, நீதித்துறை எவ்வளவு சுதந்திரமானது” என்பதைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அபேசேகர மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேட்டபோது, “இந்த அவதானிப்பை காவல்துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதி அமைச்சராக தாம் காவல்துறையை வழி நடத்துவதில்லை. குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இருந்தால், காவல்துறை விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என்று சப்ரி அல் ஜஸீராவிடம் தெரிவித்துள்ளார்.
Post a Comment