கம்மன்பில அம்பலப்படுத்திய பல விடயங்கள் (வீடியோவுடன் முழு விபரங்கள் இணைப்பு)
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில், ஜனாதிபதி கோட்டபாய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தீர்மானத்தை மாத்திரமே நான் அறிவித்தேன்.
எனவே பதவி விலக வேண்டியது நானல்ல
ஆளும் கட்சியின் தலைவருக்கு சவால் விடுக்கும் அளவில் சாகர காரியவசம் உள்ளமை குறித்து பல சந்தேகங்கள்
சாகர காரியவசம் குற்றஞ்சுமத்துவது என்மீது அல்ல. அவரது கட்சியால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதும் , அந்த கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதுமே சாகர காரியவசம் குற்றம் சுமத்துகின்றார்.
ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு சாகர காரியவசம் பாரதூரமான தவறிழைத்திருக்கிறார். அவ்வாறெனில் தற்போது பதவி விலக வேண்டியது நானா? அல்லது சாகர காரியவசமா? இதனை தீர்மானிக்க வேண்டியது அறிவுடைய மக்களின் பொறுப்பாகும்.
இன்று 13.06.2021 நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்களே இவை
இவர் நாடகத்தின் பயங்கரவாதி எனக்கூறலாம். எல்லோரையும் மூட்டி வைத்துவிட்டு தான் நல்லவனாக காட்ட எத்தனிக்கும் சர்வதேச மந்தி(ரி)
ReplyDelete