தகனம் செய்யும் இடத்திலிருந்த கொரோனா உடல், வெளியே எடுக்கப்பட்டு வேறு உடல் எரிக்கப்பட்டது
மத்துகம கல்மத்த பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த 93 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சடலத்தை தகனம் செய்வதற்காக மத்துகம வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டியில் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்களின் கண்கானிப்பின் கீழ் சுகாதார சேவை ஊழியர்களினால் அந்த சடலத்தை தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய தகனம் செய்யும் தொட்டிக்குள் சடலத்தை வைத்து ஓரிரு நிமிடங்களுக்குள் மத்துகம பிரதேச மலர்ச்சாலைக்கு சொந்தமான பிரபுக்களுக்கான வாகனம் ஒன்றில் மற்றுமொரு சடலம் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் போது தகனம் செய்யும் பகுதியிலிருந்த வயோதிப தாயின் கொவிட் சடலம், உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. அந்த சடலம் மீண்டும் அம்பியுலன்ஸ் வண்டியில் வைக்க வேண்டிய நிலைமை சுகாதார பிரிவினருக்கு ஏற்பட்டுள்ளது.
உயர் இடத்தில் இருந்து வந்த உத்தரவினால் சுகாதார பரிசோதகர்கள் கடும் நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரண்டு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கொவிட் சடலம் அம்பியுலன்ஸில் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சுகாதார அச்சுறுத்தல் ஏற்படும் என்பதனால் பாரிய அளவு கிருமி நீக்கி சடலத்திற்கு பயன்படுத்த நேரிட்டுள்ளது. சடலத்தில் இருந்து கிருமிகள் வெளியேறுவதனை தவிர்க்க ஒன்றரை மணித்தியாலங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மணித்தியாலத்திற்கு அதிக நேரம் கொவிட் சடலத்தை அம்பியுலன்ஸில் வைக்கப்பட்டிருந்தமையினால் அம்பியுலன்ஸ் மூலம் அழைத்து சென்று காப்பாற்றப்படவிருந்த மற்றுமொரு நபரையும் அழைத்து செல்ல முடியாமல் போயுள்ளமை குறித்து சுகாதார ஊழியர்கள் அதிருப்த்தி வெளியிட்டுள்ளனர்.
Post a Comment