கொழும்பில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ன கூறினாலும் கிராமங்களின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியது
நாட்டில் விவசாய பயிர்களுக்கான உரத்திற்கு கடும் பற்றாக்குறை காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உடல் பலத்தினால், உரங்களை தயாரிக்க முடியாது. கொழும்பில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் என்னக் கூறினாலும் கிராமங்களில் காணப்படும் நிலைமையானது மிகவும் பரிதாபத்திற்குரியது.
நாட்டிற்கு தேவையான இயற்கை பசளையை படிப்படியாக தயாரித்து அதிகரித்து கொள்ளும் அதேவேளை இரசாயன உரங்களை படிப்படியாக தடை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment