பசில் மாற்று வழிகளை முன்வைக்கவில்லை, அரசாங்கத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை - கம்மன்பில
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தியால் தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால், தனக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை. இது எனக்கு எதிராகக் கொண்டுவரப்படும் முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்திலிருக்கும் பலர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். யார் என்ன தான் கூறினாலும், அரசாங்கத்துக்குள் இருக்கும் பெரும்பாலானவர்கள் எனக்கு ஆதரவளிக்கிறார்கள் என்றார்.
பசில் ராஜபக்ஷ, நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்காது எனக் கூறும் கருத்துத் தொடர்பிலும் பதிலளித்துள்ள கம்மன்பில, எரிபொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பசில் ராஜபக்ஷவிடம் மாற்றுத் திட்டங்கள் இருந்தால் அதனை அவர் என்னிடம் கூறலாம். அதனை செயற்படுத்த தயாராக இருக்கிறேன். ஆனால், அவர் இதுவரையில் எந்தவிதமான மாற்று வழிகளையும் தன்னிடம் முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்
Post a Comment