நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையான கடற்றொழிலை இயல்பு நிலைக்கு திருப்ப பிரதமர் நடத்திய ஆலோசனைக் கூட்டம் (வீடியோ)
எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதால் பாதிக்கப்பட்ட பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பினை உரிய முறையில் ஆய்வு செய்த பின்னர் கடற்றொழில் நடவடிக்கைக்காக திறக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை, குறித்த கப்பலால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment