Header Ads



அமைச்சர் பதவி மட்டுமன்றி, அரசாங்கத்திடம் எந்தவொரு பதவியையும் கோரவில்லை - தவறான தகவலை மறுக்கும் மைத்திரி


தனக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தியை முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, மறுத்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், அவ்வாறான எந்தவிதமான கோரிக்கையை அரசாங்கத்திடம் தான் முன்வைக்கவில்லை, அது தவறானது. அமைச்சர் பதவி மட்டுமன்றி, அரசாங்கத்திடம் எந்தவொரு பதவியையும் தான் கோரவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாத நடுப்பகுதியில் அமைச்சரவையில் மாற்றமொன்று செய்யப்படவிருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. இந்நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படலாமென அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

1 comment:

  1. அமைச்சுப்பதவியைத் தராவிட்டால் நான் ஏற்கவும் மாட்டேன் என்பது தான் இந்த சிராவின் கோட்பாடு.

    ReplyDelete

Powered by Blogger.