ரம்புட்டான் பறிக்கச்சென்ற சிறுமி, கிளைகளுக்கிடையில் சிக்கி மரணம்
பலாங்கொடை- மாமல்கஹ பிரதேச வீடொன்றிலிருந்த ரம்புட்டான் மரத்திலேறிய 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (11) பதிவாகியுள்ளது.
ரம்புட்டான் பறிப்பதற்காக மரத்திலேறிய சிறுமி மரத்திலிருந்து தவறி விழுந்து, இரண்டு கிளைகளுக்கு மத்தியில் அவரது தலை சிக்கியதால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை ரத்மலவின்ன பாடசாலையில், 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மலீசா தத்சரனி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
20 அடி உயரமான ரம்புட்டான் மரத்திலிருந்தே குறித்த சிறுமி விழுந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.
Post a Comment