முஸ்லிம் கிராமங்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும்போது, கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
- அஷ்ஷைக் பளீல் -
பின்வரும் ஒவ்வொரு துறைக்குமான தனித்தனியான குழுகக்கள் இயங்க வேண்டும்.
1. #சுகாதாரக் குழு : - Covid-19 மென்மேலும் பரவாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள், சுகாதார வழிமுறைகள் பற்றிய தெளிவை வைத்திய அதிகாரிகள், PHI மார் ஆகியோரது உதவியுடன் பொதுமக்களுக்கு வழங்குதல்.
2. #நிவாரணக் குழு:- மக்களுக்கு தேவையான அடிப்படையான வாழ்வாதாரங்களை உயர்ந்த பட்சம் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்குவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
3. #உளவளத்துறைக் குழு:- Covid 19 காரணமாக மன ரீதியான உளைச்சலுக்கும் விரக்தி நிலைக்கும் பயத்திற்கும் உள்ளாகியிருக்கும் மக்களுக்குத் தேவையான உளநல வழிகாட்டல்களை வழங்குவதற்காக நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு அதற்கான நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
4. #அதிகாரிகளுடனான தொடர்பாடல் குழு:- மருத்துவத்துறை சார்ந்தவர்கள், அரச அதிகாரிகள்,பொலிஸார்,படையினர், நிவாரணப் பணியாளர்கள் போன்றோர் தத்தமது பணிகளை முஸ்லிம் கிராமங்களுக்குள் உரிய முறையில் செய்வதற்கு அவர்களோடு ஒத்துழைத்தல்.
5. #மீடியா குழு:- முஸ்லிம் கிராமங்கள் Lockdown ற்கு உட்படும் போது முஸ்லிம் அல்லாத சமூகங்கத்தவர்களுக்கு மத்தியில் தப்பான கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பதற்கும் எற்கனவே பரவியிருக்கின்ற அபிப்பிராயங்களை களைவதற்குமான மீடியா துறையோடு சம்பந்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
6. #ஆன்மீகக் குழு:- மக்கள் ஆன்மீக ரீதியாக பலமாகவும் தைரியமாகவும் இருப்பதற்கும் அவர்களை அல்லாஹ்வோடும் ஆன்மீக நடவடிக்கைகளுடனும் தொடர்புபடுத்தி வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் பள்ளிவாயல் ஊடாகவும் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் வாயிலாகவும் செய்வதற்கு முயற்சி பண்ணுதல்.
➖ இந்த குழுக்கள் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்டுக்கோப்போடு இயங்க வேண்டும்.
➖ முடிவுகள் நல்ல தெளிவின், கலந்தாலோசனையின் பின்னரே பெறப்பட வேண்டும்.
➖ இக்குழுவில் உலமாக்கள், துறை சார்ந்தவர்கள், மொழிப் புலமை உள்ளவர்கள், சமூக உணர்வுடன், தியாகத்துடன் அல்லாஹ்வின் கூலியை மாத்திரம் எதிர்பார்த்து பணிபுரியக்கூடியவர்கள், இளைஞர்கள், அனுபவசாலிகள் இணைந்து கொள்ள வேண்டும்.
➖ இது காலத்தின் அவசியத் தேவை மட்டுமன்றி அல்லாஹ்வின் எல்லையில்லாக் கூலியை பெற்றுத் தரும் நல் அமலுமாகும்.
➖ தகுதி உள்ளவர்கள் கட்டாயமாக இணைய வேண்டும். பொதுமக்கள் இக்குழுவுக்கு தம்மாலான சகல ஒத்துழைப்புக்களையும் வேண்டும்.
வல்லவன் அல்லாஹ் எம் அனைவரையும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவிப்பானாக. இந்நிலையில் தியாகத்தோடு வேலை செய்யக்கூடிய அனைவருக்கும் அவன் அபரிமிதமான கூலியைக் கொடுப்பானாக.
அனைவருக்கும் மன தைரியத்தையும் பொறுமையையும் வழங்குவானாக!
2020.12.03
பூனைக்கு மணி கட்டுவது யார்?
ReplyDelete