ரிஷாத்தின் மனு - நீதியரசர் நவாஸ் வழக்கு விசாரணையிலிருந்து விலகினார்
ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதர்ரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதிலிருந்து தான் விலகுவதாக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், இன்று (23) நீதிமன்றுக்கு அறிவித்தார்.
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, ரிஷாட்டும் அவரது சகோதரரும் தனித்தனியாக தாக்கல் செய்த இந்த மனுக்கள், பிரிதி பத்மன் சூரசேன, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இந்த மனு விசாரணைகளிலிருந்து விலகுவதாக, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தெரிவித்தார்.
இந்த காரணத்தால் குறித்த மனுக்களை ஆராய்வது அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
Post a Comment