ஒரு வருடத் தடையா..? 5 வருடத் தடையா..?? அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்காது
கொவிட் பாதுகாப்பு உயிர்க்குமிழி நடைமுறையை மீறியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள குசல் மெண்டிஸ், நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக்க ஆகியோருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் மூன்று பேரும் இன்று -29- இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பினர்.
அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகால போட்டித் தடை விதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் சில அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட கால கிரிக்கெட் தடை விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம், குறித்த 3 பேர் தொடர்பாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து, அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் என்ற சுயாதீன நிறுவனம் அதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
life time ban would be good for mendis
ReplyDelete