மோடியின் “சென்ட்ரல் விஸ்டா”ஆடம்பர பங்களா கட்டுமானப் பணிகளுக்காக டெல்லியில் 5 பள்ளிவாசல்களை இடிக்க சதி
1. சப்த கஞ்ச் ஷாஹி மஸ்ஜித் : புராதனமான இந்தப் பள்ளிவாசல் “இந்தியா கேட்” அருகே அமைந்துள்ளது. மராட்டியர்களுக்கு எதிரான “மூன்றாம் பானிபட்” போரில் முக்கிய பங்கு வகித்த நஜீப் தௌலாவின் புதல்வர் என்று அழைக்கப்படும் "சப்தா கான்" என்பவரால் இந்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது.
2. ரிக்காப் கஞ்ச் மஸ்ஜித் : புகழ்பெற்ற குருத்வாரா "ரிகாப் கஞ்ச் சாஹிப்" அருகே அமைந்துள்ள பண்டைய மஸ்ஜித் இது.
3. க்ருஷி பவன் மஸ்ஜித் : இந்த மஸ்ஜித் "க்ருஷி பவன்" (வேளாண் இல்லம்) வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது.
4. சுன்ஹரி பாக் மஸ்ஜித் : இது சுன்ஹரி பாக் சாலையில் அமைந்துள்ள மற்றொரு பள்ளிவாசல் ஆகும்.
5. மற்றும் துணை ஜனாதிபதியின் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அழகிய / விசாலமான தற்போதைய தலைமையகதிற்குப் பதிலாக, புதிய பாராளுமன்ற மாளிகை, பிரதமரின் சொகுசு மாளிகைக்குச் செல்வதற்கான நிலத்தடிச் சுரங்கம், புதிய தலைமையகம் ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய அரசு தொடங்கிய திட்டமே “Central Vista” திட்டமாகும்.
இதற்காக, ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜ்பாத்தில் உள்ள 3.5 கி.மீ சுற்றுப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் சகல வசதிகளுடன் உறுதியான தன்மையுடன் இருக்கும்போது, "ஏன் புதிய நாடாளுமன்றக் கட்டடம்?" என்ற கேள்வி பொதுவெளியில் எழுப்பப்படுகிறது. மேலும்,
`கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திவரும் சூழலில், ரூ. 20,000 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடமும், பிரதமர் வசதிப்பதற்கு சொகுசு மாளிகையும் தேவைதானா?’ என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் உட்பட பல தரப்பினரும் எழுப்பியுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க / பயன்பாட்டில் உள்ள இந்தப் பள்ளிவாசல்கள் இடிக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்துமாறு “ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த்”’தின் தலைவர் மௌலானா மஹ்மூத் மதனி மற்றும் டெல்லி வக்ஃப் வாரியத் தலைவர் அமனத்துல்லா கான் ஆகியோர் மதிய அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியின் எந்தப் பக்கம் திரும்பினாலும், முகல் ஆட்சியின் தடங்களையும், புராதனக் கட்டிடங்களையும் பார்க்காமல் இருக்க முடியாது. பாரம்பரியமிக்க / வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக, அவற்றைத் தேடித்தேடிச் சிதைப்பதற்கு காரணம் தேடிக் கொண்டிருக்கும் இந்த தீய சக்திகளுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது போலும்...
நன்றி : ஜாபர் சாதிக் பாகவி
Post a Comment