560 பள்ளிவாசல்களை நிறுவும் திட்டத்தின் கீழ், ஒரேநேரத்தில் 50 மசூதிகளை திறந்துவைத்த வங்கதேச பிரதமர் ஹசீனா
வங்கதேசம் முழுவதும் மசூதிகள், அரபு மதரஸாக்கள் இல்லாத பிராந்தியங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அந்தந்த பகுதி மக்கள் தொகை அடிப்படையில் 560 மசூதிகள் கூடுதலாக தேவை என்பது கண்டறியப்பட்டு கடந்த 2017 முதல் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது..
வங்கதேச தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நூற்றாண்டு மற்றும் வங்கதேச சுதந்திர தின பொன்விழா இந்த ஆண்டு நடப்பதால் முதல் கட்டமாக ஐம்பது மசூதிகளின் பணி பூர்த்தி செய்து தொழுகைக்கு திறக்கப்பட்டது..
மீதமுள்ள அனைத்து மசூதிகளும் 2023 ம் வருடத்திற்குள் பணி பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது..
560 மசூதிகளும் ஒரே மாதிரி வடிவமைப்புடன் கூடியதாகவும், மசூதியுடன் டிஜிட்டல் நூலகம், அரபி பாடசாலை, அரபிக் கல்லூரி இணைந்து உருவாகி வருகிறது.
அனைத்து மசூதிகளும் பணி பூர்த்தி ஆகும் போது மொத்தமாக 1,68,000 குழந்தைகள் மதரஸா ஆரம்ப கல்வியும், மேற்படிப்பாக குர்ஆன் மனனம் செய்வதன் மூலம் ஆண்டு தோறும் புதிதாக 14000 ஹாஃபிழ்கள் பங்களாதேஷில் தேர்ச்சி பெறும் வகையிலான தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் ஷேக் ஹசீனா திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்..
Colachel Azheem See less
Let's pray Allah to guide our muslim countries leaders towards Islam.
ReplyDelete