சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாவிட்டால் 50,000 ரூபா அபராதம், கொரோனாவை ஒழிப்பதற்காக திட்டம் - பவித்ரா
250 மில்லியன் ரூபா செலவில் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூட திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு மற்றும் காவல்துறையினர் ஒன்றிணைந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொவிட் தொற்றை ஒழித்து, நாட்டை பாதுகாப்பதற்கான இயலுமை எமக்கு உள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளை கட்டுப்படுத்த இயலுமானதாக இருந்தால், மூன்றாவது அலையையும் கட்டுப்படுத்துவது கடினமான காரியம் அல்லவென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த இலக்கை அடைவதற்காகவே அனைத்துவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துவதற்கான தேவைப்பாட்டையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Hi hi
ReplyDelete