முஸ்லிம் ஆண்களின் 4 திருமண அனுமதி ரத்து, காதி நீதிமன்றத்தை ஒழித்தல் பற்றி நான் அமைச்சரவையில் எந்தப் பத்திரத்தையும் சமர்ப்பிக்கவில்லை - அடித்துக்கூறும் அலி சப்ரி
முஸ்லிம் விவாக, விகாகரத்து சட்ட சீர்திருத்தத்தம் தொடர்பில், தான் அமைச்சரவையில் ஒரு பத்திரத்தை சமர்ப்பித்ததாக சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம்கள் 4 திருமணங்களை முடிக்கவுள்ள அனுமதியை ரத்துச் செய்ய வேண்டுமென்றோ, அல்லது காதி நீதிமன்ற முறையை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றோ எந்தவொரு பத்திரத்தையோ, சிபார்சுகளையோ அமைச்சரவையில் சமர்ப்பிக்கவில்லை என அடித்துக் கூறினார்.
Jaffna Muslim இணையம் நீதி அமைச்சர் அலி சப்ரியுடன், வட்சப் மூலமாக தொடர்பு கொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதுதொடர்பில், மேலும் குறிப்பிட்டதாவது.
முஸ்லிம் விவாக, விகாகரத்து சட்ட சீர்திருத்தத்தம் தொடர்பில், அமைச்சரவைக்கு நான் சில சீர்திருத்த ஆலோசனைகளை முன்வைத்தேன். அதில் முஸ்லிம் ஆண்கள் 4 திருமணங்களை செய்யவுள்ள உரிமை, காதி நீதிமன்ற முறை ரத்துச் செய்யப்பட வேண்டுமென்றோ நான் எதனையும் வலியுறுத்தவோ அல்லது சிபார்சுகளை முன்வைக்கவோ இல்லை.
எனினும் அமைச்சரவையானது, நான் முஸ்லிம் விவாக விகாகரத்து சட்ட சீர்திருத்தத்தம் தொடர்பில் ஆலோசனைகளை முன்வைத்தபோது, முஸ்லிம் ஆண்கள் 4 திருமணம் செய்வதற்கு இருந்த அனுமதி மற்றும் காதி நீதிமன்ற முறைமையையும் இரத்துச் செய்யப்பட வேண்டுமென தீர்மானித்து, அதன்படி அவை இரண்டையும் ரத்துச்செய்தது.
இதுவே அமைச்சரவையின் இடம்பெற்றது. இது அமைச்சரவையின் தீர்மானமாகும். இந்த தீர்மானத்தை அமைச்சரவை மாற்றிக்கொள்ளும் என்று நான் நம்பவில்லை.
அத்துடன் திருமண வயது 18, திருமணத்தில் மணப் பெண்ணும் கையொப்பமிடுதல் போன்ற 2 விடயங்களையும் அமைச்சரவை உள்ளீர்த்து தீர்மானங்களாக நிறைவேற்றி உள்ளதெனவும், நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திடம் மேலும் தெரிவித்தார்.
அமைச்சருக்கு விருப்பமில்லாத ஒன்று அவருடைய அமைச்சின் விடயப்பரப்புக்குள் இருந்த போதும் தடுக்கமுடியாமல் போகுமாயின் அப்பதவியிலிருந்து விலகுவதே கெளரவமானதும் படிப்பினை புகட்டக்கூடியதுமாகும். எனது கணிப்பின் பிரகாரம் அமைச்சர் அவர்கள் எதற்காகவும் கெளரவத்தை விட்டுக்கொடுப்பவரில்லை. இது தொடர்பான அவரின் முடிவிலேயே எனது கணிப்பினை ஸ்திரப்படுத்துவதா? அல்லது மாற்றிக்கொள்வதா? என்பது முடிவாகும்.
ReplyDeleteAli Sabry Esq. Hon. Minister of Justice
ReplyDeleteSo, it is a Cabinet decision to disallow Muslim men marrying more than one wife and to abolish the Quazi Court system. As a Muslim and as the Minister of Justice, what is your Stand on these matters? Do you agree with the Cabinet decision or not?
Please remember that the right to have four wives at the same time is an Islamic right given by Almighty Allah and NO man/men, however powerful he/they may be, can take this Right away from the Muslims. No doubt, you are aware of this. Are you going to take this Blatant Violation of the Right of Muslims, given by Divine Will, lying down or are you going to do your duty by doing everything in your power to make the Cabinet change its decision?
As for the abolition of the Quazi Court system, will there be another system to replace it?
Please remember the following.
"Rev. Fr. S. G. Perera, History of Ceylon for Schools, Volume 1, 1947, page 9 quoting Chief Justice Sir Alexander Johnston, says that when the Portuguese arrived in 1505, Colombo which was the chief port and the mart of the island’s trade with a largely Muslim population, had a court of justice to settle disputes according to Islamic Law."
The Muslims' Right to practice Islamic Law in this country is Ancient, several centuries old. Do you want to do everything possible to Protect this right or just do Nothing while this RIGHT is FORCIBLY taken away under your watch as Minister of Justice?
என்ன செய்ய எமது சமூகத்தின் தலையெழுத்து இந்த தேசியப்பட்டியல் மூலம் உங்களது அறிவையும், ஈமானையும் கட்டிப்போட்டுள்ளது. மக்களின் வாக்குகள் மூலம் நீங்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தால், எமுது 20 ரூ அமைச்சர்கள் பட்டியலில் நீங்களும் சேர்க்கப்பட்டிருப்பீர்கள். உங்களை நீதி அமைச்சராக வைத்துக்கொண்டே எமது முழு உரிமைகளையம் ஒவ்வொன்றாக இவனுகள் நடுவீதியில் இழுத்து அறுத்துவிடுவானுகள் அதற்கு முன்பாக சமயோசிதமாக நீங்களாகவே ஒரு சிறந்த முடிவை எடுத்து பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வந்துவிடுங்கள்....
ReplyDelete