பயணக் கட்டுப்பாடு 21 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டது
நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று(12) தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று(10) அறிவிக்கப்பட்டது
எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.
Post a Comment