இன்று வெள்ளிக்கிழமை 15 ஜனாஸாக்கள் மஜ்மா நகரில் நல்லடக்கம்
-நஜிமிலாஹி-
மொத்தமாக 555 கொரோனா மரணங்கள் "கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில்" அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இன்றும் (11.06.2021) 15 ஜனாஸாக்களும் ஒரு கிறிஸ்தவ மரணமும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிம்முக்குத் தெரிவித்தார்.
இதன்படி 525 ஆக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 13 கிறிஸ்தவ மரணங்களும் 11 இந்து மரணங்களும் 04 பௌத்த மரணங்களும் 02 வெளிநாட்டவர்களின் மரணங்கள் என்றவாறு மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment