Header Ads



ஆபத்தான கட்டத்திலா இலங்கை..? 10 நாட்களில் 500 கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொவிட் நோய் காரணமாக கடந்த 10 நாட்களில் 546 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

மரணம் ஒன்று சம்பவித்த தினத்தில் அன்றி, அந்த மரணம் கொவிட் நோயால்தான் இடம்பெற்றது என்பதை உறுதிப்படுத்தி பிரிதொருநாளிலேயே அறிக்கை வெளியாக்கப்படுகிறது.

இவ்வாறு கடந்த 10 நாட்களில் வெளியாக்கப்பட்ட அறிக்கைகளின் படி, இறுதி 10 நாட்களில் 546 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் முதல் 500 கொவிட-19; மரணங்கள் பதிவாவதற்கு 347 நாட்கள் சென்றிருந்தன.


இரண்டாவது 500 கொவிட் மரணங்கள் 72 நாட்களில் பதிவான அதேநேரம் 13 நாட்களில் மூன்றாவது 500 மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று வெளியான அறிக்கையின் தரவுகளை உள்ளடக்காது, கடந்த 10ம் திகதி வரையான 10 நாள் காலப்பகுதியில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 527 ஆகும்.

இதன்படி இறுதி 500 மரணங்கள் வெறும் 10 நாட்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் மேலும் 62 பேர் கொவிட் தொற்று நோயினால் உயிரிழந்ததாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மரணங்களில் மே மாதம் 8ம் திகதி முதல் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் 7 பேரின் மரணங்களும், ஜுன் மாதம் 01 முதல் 10 வரையான காலப்பகுதியில் 55 பேரின் மரணங்களும் சம்பவித்துள்ளன.

அவர்களில், 13 பேர் வீடுகளிலேயே மரணித்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 05 பேர் உயிரிழந்திருந்ததுடன், 44 பேர் வைத்தியசாலைகளில் சிசிக்சைப்பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.