Header Ads



கொரோனா ஏற்படுத்தும், கொடிய விளைவுகள்


எனது மனைவி அஞ்சலி ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருந்தார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள், மூன்று வயது மகன் மற்றும் ஒரு ஐந்து வயது மகள் உள்ளனர், அவள் இந்தக் குழந்தையை என் சகோதரிக்குக் கொடுப்பதாக இருந்தாள். ஆனால், அதற்குள் அவள் இந்தக் கொடுமையான நோய்க்குப் பலியாகிவிட்டாள்.

சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனா இருந்தது. எனவே அஞ்சலிக்கும் பரிசோதனை செய்தோம். ஆன்டிஜென் சோதனையில் நெகடிவ் வந்தது. ஆர்.டி.பி.சி.ஆரின் முடிவுக்காகக் காத்திருந்தோம்.

இதற்கிடையில், அவளுக்கு இருமல் ஏற்பட்டது, ஆக்சிஜன் அளவு 85 ஆக குறைந்தது. நாங்கள் கிராமத்தில் உள்ள தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்றபோது, ​​அது நிச்சயமாக கொரோனாதான் என்றும் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் சொல்லிவிட்டார்கள்.

நாங்கள் அவரை ஆம்புலன்சில் ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ​​நெகடிவ் என்று வந்தது. இங்கு அனுமதிக்க முடியாது, மாவட்ட மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று கூறினார்கள்.

மிகவும் கெஞ்சிய பிறகு, இரண்டரை மணி நேரம் கழித்து, அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. பின்னர் ஆன்டிஜென் சோதனை செய்யப்பட்டது, அது மீண்டும் நெகடிவ் ஆக வந்தது. அதனால் அங்கும் அனுமதி இல்லை.

பின்னர் நாங்கள் ஆம்புலன்சில் முசாபர்நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அவருக்கு மீண்டும் சோதனை செய்ததில், இந்த முறை கொரொனா உறுதியானது.

இப்போது மாவட்ட மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்து, மீண்டும் பெகராஜ்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள்.

அந்த பாசிடிவ் அறிக்கையுடன், நான் மீண்டும் அவளை அழைத்துச் சென்றேன். இந்த முறை அதே மருத்துவமனையில் அனுமது கிடைத்தது. ஆனால் சில மணி நேரங்களுக்குள் அவள் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், வென்டிலேட்டரில் வைக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

எங்கள் குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லை என்றும் கருவிலேயே அது இறந்துவிட்டதாகவும் தகவல் கூறினார்கள்.

பின்னர் என் மனைவியில் இதய துடிப்பும் நின்றுவிட்டது என்று எனக்கு அழைப்பு வந்தது. என் அஞ்சலி தனது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.

நான் அவளை அந்த இரண்டு மருத்துவமனைகளுக்கு இடையில் மூன்று நாட்கள் சுற்றிக் கொண்டே இருந்தேன். சோதனை முடிவுகளும் மாறிக்கொண்டே இருந்தன. அவளது உடல்நிலையும் தொடர்ந்து மோசமடைந்தது.

அவளுக்கு அந்த மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அவள் உயிர் பிழைத்திருக்கலாம்.

இந்த வைரஸ் ஒரு உயிர்கொல்லி தான். ஆனால் அதை விடக் கொடுமையானது நமது அமைப்பு, இது நம்மை வென்று விட்டது.

இப்போது நான் என் குழந்தைகளைப் பார்த்து, அவர்களால் சிறப்பாக ஏதாவது செய்ய முடியும் என்று நினைக்கிறேன். நான் அவர்களை ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் படிக்க வைப்பேன். ஒருவேளை ஒன்றாக இணைந்து நாம் இந்த அமைப்பைச் சரிசெய்ய முடியும். BBC

1 comment:

  1. இருவேறு உலகங்களாக இந்தியா இருக்கிறது. இந்திபேசும் மாநிலங்கள் உட்பட பெரும்பாலான வடமாநிலங்கள் வளற்ச்சி குன்றிய நிலையிலேயே உள்ளது. கொரோனோ காலத்தில் வளற்ச்சி குன்றிய நிலமை பெருந்துயர் ஆகிவிட்டது. வளற்ச்சி அடைந்த இந்திவின் முன்னணி மாநிலமான தமிழகத்தில் இருக்கிறதால் எங்கள் நிலமை வேறாக உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.