ஒக்சிசன் நெருக்கடி ஏற்படலாம் - மருத்துவ நிபுணர்கள் சங்கம்
தற்போது கொவிட் நோயாளிகளிற்கு ஒக்சிசசே மிகஅவசியமானதாக உள்ளது என தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்களின் சங்கம் ஒக்சிசன் குறைந்தளவே கையிருப்பில் இருக்கலாம் இதன் காரணமாக அரசாங்கம் அவசரநடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரசிற்கான சிகிச்சையொன்று இல்லாததன் காரணமாக அறிகுறிகளை அடிப்படையாக வைத்து கிசிச்சை வழங்குவதே இடம்பெறுகின்றது என மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் விடயத்தில் ஒக்சிசனும் தீவிர கிசிச்சை பிரிவும் முக்கியமானவை என தெரிவித்துள்ள வைத்தியர் பேரிடர் உருவாவதை தடுக்கவேண்டும் என்றால் தீவிரகிசிச்சை பிரிவில் உள்ள கட்டில்களிற்கு தடையற்ற ஒக்சிசன் விநியோகத்தை உருதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வலுவான நிதிவளங்களை கொண்ட பிராந்திய வல்லரசான இந்தியாவே ஒக்சிசன் இன்மையால் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். Thinakkural
Post a Comment