நாட்டை முடக்கும் தேவையில்லை, மக்களது ஒத்துழைப்பே அவசியம் - இராணுவத்தளபதி
அதற்கிணங்க கொழும்பு, நுவரெலியா, திருகோணமலை மாவட்டங்களிலும் பல பகுதிகள் நேற்று முதல் தனிமைப்படுத்தலுக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை முழுமையாக முடக்கும் அவசியமில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள இராணுவத் தளபதி, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களது பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவும் பிரதேசங்களில் தேவைக்கேற்ப தனி மைப்படுத்தலுக்கான முடக்கம் மேற்கொள்ளப்படும் என்றும்,அதேவேளை சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படு வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினர் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், கடுமையான உழைப்பின் மூலம் விரைவில்கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்சி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
Post a Comment