மரண தருவாயில் கலிமா சொல்லிக்கொடுத்த Dr ரேகா கிருஷ்ணன்
கோவிட் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சேனா மருத்துவமனையின் கொரோனா ICU வார்டில் சிகிக்சை பெற்று வந்த கேரளா பட்டித்தர கக்காட்டிரியைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியொருவரின் மரண வேளையில் கலிமா ஷஹாதா சொல்லிக் கொடுத்தார் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ரேகா கிருஷ்ணன்.
மரண நேரத்தில் உறவினர்கள் யாரும் பக்கத்தில் இல்லாத காரணத்தால் அப்பெண்மணிக்கு டாக்டர் ரேகா கலிமா சொல்லி கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
(لا إله إلا الله محمد رسول الله )
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற திருக்கலிமாவை மரண நேரத்தில் காதுக்கருகில் சொல்லிக் கொடுத்து கேட்கச் செய்வதும், அதைச் செவியேற்று எடுத்துரைக்க முடிவதும் இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை பாக்கியம் மிகுந்ததாகும்.
மரண தருவாயிலிருந்த அந்த தாயிக்கு ஓரு மகளைப் போன்று வாஞ்சையுடன் ஷஹாதத் கலிமா சொல்லிக் கொடுத்து மறுமை வாழ்க்கைக்கு வழி அனுப்பி வைத்துள்ளார் டாக்டர் ரேகா கிருஷ்ணன்.
தகவல்: M.சிராஜுத்தீன்அஹ்ஸனி.
அழ்ழாஹ் ரேகா வுக்கும் ஹிதாயத் கொடுப்பானாக. (அல்ஹம்துலில்ழாஹி அலாகுல்லிஹாள்)
ReplyDelete