Header Ads



இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் பயணிகளுக்கு சிறை தண்டனை


கொரோனா அசுசுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா அரசு தடை விதித்தள்ளது. தடையை மீறி வருவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வருவது குற்றம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியாவில் கொரோனா நோய் தொற்றிக்கொண்டவர்கள் விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த சட்டம் போடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் மிகக் குறைந்த அளவிலேயே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருக்கும் போதும், மற்ற நாடுகளை விட மிகக் குறைந்த அளவிலேயே உயிரிழப்புகள் இருக்கிற போதும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் பல ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரத் தொடக்கத்தில், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்தது ஆஸ்திரேலியா. இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 600 பேர் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

திங்கட்கிழமையில் இருந்து 14 நாள்களுக்குள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பவேண்டிய நிலையில் இருப்பவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் நுழைவது தடை செய்யப்படுகிறது. இந்த புதிய விதியை மதிக்கத் தவறுகிறவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையோ, சுமார் ரூ.38 லட்சத்துக்கு இணையான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். மே 15ம் தேதி இந்த தடை மறுபரிசீலனை செய்யப்படும் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.