முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா - நெருங்கிப் பழகியவர்களை தனிமைப்படுமாறும், தனக்காக பிரார்த்திக்குமாறும் கோரிக்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கொழும்பில் உள்ள, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
Mujibur Rahman
எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நான் கொழும்பு சென்ட்ரல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இருந்த காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் நேற்றுமுன்தினம் அண்டிஜன் பரிசோதனை செய்துகொண்டேன். அதன் முடிவு நெகடிவ் என்று இருந்தது.
மீண்டும் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே கடந்த நாட்களில் என்னோடு நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் நான் விரைவில் பூரண சுகமடைவதற்கு உங்களுடைய பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுமாறும் மிகவும் அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்.
அனைத்துக்கும் வல்லோனாம் எல்லாம் வல்ல ரப்பில்ஆழமீனான அழ்ழாஹ் அவனின் அருட்பார்வை மூலம் முஜிபுர் ரஹ்மான் எனும் காத்திரமான அடியாரை காத்தருள்புரிவானாக(தஹூருன் இன்ஷா அழ்ழாஹ்)
ReplyDeleteஅனைத்துக்கும் வல்லோனாம் எல்லாம் வல்ல ரப்பில்ஆழமீனான அழ்ழாஹ் அவனின் அருட்பார்வை மூலம் முஜிபுர் ரஹ்மான் எனும் காத்திரமான அடியாரை காத்தருள்புரிவானாக(தஹூருன் இன்ஷா அழ்ழாஹ்)
ReplyDeleteயாஅல்லாஹ் இவருடைய நோயைக்குணமாக்கி, அவரையும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் அருளுவானாக.
ReplyDeleteAllah's blessing for your quick recovery...
ReplyDelete