றிசாத்தின் தந்தையும் குறிவைப்பு...? இந்திய பாதுகாப்புத்துறையும் களத்தில் குதிப்பு
குற்றப்புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இந்தியாவின் கேரள பகுதியில் உள்ள மதத்தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2009ஆம் ஆண்டு இந்தியாவின் கேரள பகுதிக்கு, ரிஷாத் பதியுதீன் விஜயம் செய்திருந்த போது அங்குள்ள மதத்தலைவர்களுடன் நெருங்கி பழகியுள்ளார்.
அத்துடன் இவர் அமைச்சராக பதவிவகித்த 2013ஆம் ஆண்டில் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அவர்களுடனான தொடர்பை வலுவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் தந்தைக்கும் குறித்த நபர்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இந்தியாவின் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
இதை காரணமாக வைத்து ஆசியாவின் கேவலமான இந்தியா இலங்கைக்குள் காலூன்ற பார்க்கின்றது ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக இந்தியாவின் இந்த திடீர் தலையீடு, நேற்று நாமல் குமாரவின் திடீர் தலையீடுகள் சந்தேகம்கொள்ள வைக்கின்றது
ReplyDeleteகதை கதையாம் காரணமாம்...
ReplyDelete