Header Ads



72 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு - கடற்படையினரின் அதிரடியில் சிக்கியது


யாழ் சில்லாலை கடல் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 240 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி சுமார் 72 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

குறித்த பகுதியில் வட பிராந்திய கடற்படை கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 105 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது. 

இவை அனைத்தும் கடத்தல்காரர்களினால் வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளது. 

நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.