Header Ads



28 பேரை பிணை எடுக்க 224 பேர் குவிந்தனர்


(மு.தமிழ்ச்செல்வன்)

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்  நேற்று வியாழக்கிழமை 28 பேரை பிணை எடுப்பதற்காக 224 பேர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

கடந்த ,ஈஸ்டர் தினத்தன்று பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா மற்றும் கரடிக்குன்று கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே

ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து பொலிஸாரினால் 28 கைது செய்யப்பட்டனர்.

மேலும் 15 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  கூறப்படுகின்றது.

இந் நிலையில், கைது செய்யப்பட்டவர்களை கடந்த வியாழக்கிழமை பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

அந்தவகையில் குறித்த 28 பேர் மீதும்  ஊருக்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, தாக்கியமை, என எட்டு முறைப்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனடிப்படையில் ஒவ்வொருவருக்கும் எட்டு வழக்குகள்  பதிவு செய்யப்பட்டதோடு ஒரு வழக்குக்கு ஒரு ஆட்பிணை என்ற அடிப்படையில் ஒருவர் எட்டு ஆட் பிணைகளில் செல்ல நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து மேற்குறித்த 28 பேரையும் பிணைக்க எடுக்க 224 பேர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.