அமெரிக்கர்களின் கணக்குகளுக்கு நுழைந்து, இலங்கையர்களுக்கு மாறிய 1440 மில்லியன் ரூபாய்
குறித்த நபர் டுபாய் நோக்கி செல்வதற்காக விமான நிலையம் வந்த வேளையில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
86 மில்லியன் ரூபாய் பணம் சந்தேகநபர்களின் கணக்குகளில் வைப்பிடப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய திருகோணமலை, பாவனாசகுளம், கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து தனியார் வங்கி கணக்குகளில் 1440 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அந்த பணத்தை அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபரே அனுப்பியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அமெரிக்காவில் இருக்கும் நபர்களின் கணக்குகளுக்கு இணையத்தளம் ஊடாக நுழைந்து இலங்கையர்களின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றியுள்ளனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். TW
Not kinniya...Kanniya
ReplyDelete