Header Ads



சீன தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு - WHO அனுமதிக்கவில்லையாம்..!


சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொதுமக்களிற்கு வழங்குவதற்கு முதல் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும்அதிகாரசiயின் அனுமதியை பெறவேண்டும்என இலங்கைமருத்துவ சங்கம்வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை மருத்துவ சங்கம் இந்த வேண்டுகோளைவிடுத்துள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை இலங்கைமக்களிற்கு பயன்படுத்துவதற்கு  இன்னமும் தேசிய மருந்துகள்ஒழுங்குபடுத்தும் அதிகார சபை அனுமதி வழங்கவில்லை என அறிய முடிவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவின் மருந்திற்கு உலக சுகாதாரஸ்தாபனம் அனுமதி வழங்கவில்லை எனவும் இலங்கை மருத்துவ சங்கம்தெரிவித்துள்ளது.

சீன மருந்துகளின் பாதுகாப்பு செயல்திறன்நோய் எதிர்ப்பு திறன் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு இதுவரை வழங்கப்பட்ட தரவுகள் போதுமானவையில்லை என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை நியமித்த குழு முடிவிற்கு வந்துள்ளதாக அறிய முடிவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த முடிவை புறக்கணித்துவிட்டு சீனாவின்  தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீன மருந்துகள்பெருமளவிற்கு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை இதனை உறுதி செய்கின்றது என தெரிவித்துள்ள இலங்கை மருத்துவர்கள் சங்கம் தேசிய மருத்துவ அதிகார சபையின் அனுமதியை பெறாமல் வெளிநாட்டவர்களிற்கு கூட மருந்தினை வழங்குவது இலங்கையில் வழமைக்கு மாறான விடயம் எனவும் தெரிவித்துள்ளது. தினக்குரல்

No comments

Powered by Blogger.