ஐ.நா முன்பாக UNP ஆர்ப்பாட்டம் - முஸ்லிம்களின் தொப்பியுடன் பங்கேற்ற ஆசு மாரசிங்க (படங்கள்)
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு முன்பாக, ஐக்கிய தேசியக் கட்சி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் காடழிப்பு எதிராகவே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், தலைமையகத்திலிருந்த அதிகாரியிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
இவ்வார்ப்பாட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. அதில், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். அத்துடன், கட்சியின் பெண்கள் பிரிவினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
(படங்கள்: நிமல்சிறி)
Post a Comment