UNP யின் தகவல்களை வஜிர அபேவர்தன, ராஜபக்சவினருடன் பகிர்ந்து கொள்வது பகிரங்க ரகசியம் - மனுஷ Mp
பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் கொண்டிருக்கும் உடன்பாடு குறித்தும், 2010 ஆம் ஆண்டு அவர் தோல்வியடைந்த பின்னர், அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் செய்துக்கொண்ட உடன்பாடு பற்றியும் காலி மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
ராஜபக்சவினருடன் இருக்கும் உடன்பாடு காரணமாக காலி மாவட்ட மக்கள் கடந்த 2010 ஆம் அண்டு பொதுத் தேர்தலில் வஜிர அபேவர்தனவை தோற்கடித்து என்னை வெற்றி பெற செய்தனர்.
கடந்த காலத்திலும் தற்போதும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் தகவல்களை அவர், ராஜபக்சவினருடன் பகிர்ந்து கொள்வது என்பது பகிரங்கமான ரகசியம்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் பிரதமராக பதவிக்கு வர வேண்டும் என்ற நீண்டநாள் கனவு வஜிர அபேவர்தனவுக்கு உள்ளது எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
உடன்பாட்டு அரசியல் தொடர்பில் பிரபலமான வஜிர அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment