நாம் இலங்கைப் பிரஜையா..? சீனப் பிரஜையா..?? இம்ரான் Mp க்கு சந்தேகம்
கிண்ணியாவில் நேற்று (29) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துரைக்கையில் சீனி மோசடி,தேங்காம் எண்ணெய் மோசடி எனத் தொடங்கி தற்போது கேஸ் மோசடியை ஆரம்பித்துள்ளது இலங்கை வாழ் மக்களை முட்டாளாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது 12.5 நிறை கொண்டதை 1525 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிற அதே நேரம் 1426 ரூபாவுக்கு 9.2 நிறை கொண்டதை வழங்குகிறது நூறு ரூபா குறைத்து 3kg இடை குறைக்கப்பட்டுள்ளது .12.5 நிறைகொண்ட கேஸை வாங்க வேண்டுமானால் 1832 ரூபா செலவை செய்ய வேண்டும் இதனால் 307 ரூபா அதிகரித்து காணப்படுகிறது. இப்படியாக கொவிட்19 மூன்றாம் கட்ட அலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் கடந்த இரு நாட்களுக்குள்ளும் அதிகூடிய தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்ட போதிலும் நாட்டை முடக்க மாட்டோம் என்கிறார்கள் ஆனால் தனிமைப்படுத்தல் காலம்14 நாட்கள் 30 ம் திகதி வரை பாடசாலை விடுமுறைகள் ஐந்து நாட்களுக்குள் கொரோனாவை ஒழிக்க முடியுமா ? கொவிட்19 உம் அரசின் நாடகமா அல்லது மேதினத்தை முடக்கும் செயற்பாடா பாரிய மேதினத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஜே வி.பி மைத்திரி அணியினர் நடாத்த திட்டமிடப்பட்டது இதனை முடக்கவே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது. புர்கா தடையினை மீண்டும் கொண்டு வந்துள்ளனர் ஒரு மாதத்திற்கு முன்னர் ஜெனிவா வாக்கெடுப்பில் முஸ்லிம் நாடுகளின் உதவி தேவை என்பதற்காக அதனை கைவிட்டு தற்போது சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம் செய்யும் போது மீண்டும் புர்கா விடயத்தை விஸ்வரூபமாக்கியுள்ளனர் இதனால் சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இலங்கை பிரதமர் ஜனாதிபதி இடையில் மேற்கொண்ட ஒப்பம் தான் என்ன பாதுகாப்புக்காக நிதி வழங்கப்பட்டதாகவும் பேசப்படுகிறது. முழு இலங்கையையும் சீனாவுக்கு கொடுத்துவிடுவார்கள் போல கொழும்பு போர்ட் சிட்டியை கொடுக்க இருப்பவர்கள் நாளை திருகோணமலை துறைமுகத்தை கொடுக்கமாட்டார்களா இதனால் நாம் இலங்கை பிரஜையா சீன நாட்டு பிரஜையா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.
UNAKKU SHANDEKAMAA??
ReplyDeleteUNGA APPAN KITTA KELU.
UNMAYA VELIPPADUTHUVAN.