மதுக் கடைகளை நீண்டநேரத்திற்கு திறக்கச்சொன்ன, பெண் Mp யின் கூற்று அவமானமானது – சோபித தேரர் கடும் எதிர்ப்பு
டயானா கமகேவின் கருத்தால் பெண் சமூகத்துக்கு அவமானம் ஏற் பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மதுபான விற்பனை நிலையங்களைத் திறந்து வைப்பதற்கான காலத்தை நீடிக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்றத்தில் முன்மொழிந்த கருத்தால் பெண் சமூகத்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய, ஸ்ரீ போதி ராஜ விகாரையில் இடம்பெற்ற விழாவின் பின்னர் ஊடக சந்திப்பில் ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் மற்றும் சரியான பாதையில் நாட்டை வழி நடத்த நினைப்போர் மதுபான விற்பனை நிலையங்களை மூட முயல்கின்றனர்.
ஆனால் மதுபான விற்பனை நிலையங்களைத் திறந்து வையுங்கள், மது பான விற்பனை நிலையங்களைத் திறந்து வைப்பதற்கான காலத்தை நீடியுங்கள் எனப் பெண் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பாதுகாக்க வேண்டியவர்கள் நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்வது வெளிப்படையாகத் தெரிகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, துரதிர்ஷ்டவசமாகப் பெண் ஒருவரின் குரலில் கேட்க வாய்ப்பு கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மதுபானம் விற்பனை செய்வதால் கிடைக்கும் வருமானத்தில் மாத்திரம் இவர்கள் கவனம் செலுத்துகிறார்களே ஒழிய மதுபான அருந்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்து இவர்கள் சிந்திக்கவில்லை.
மது விற்பனையால் அரசாங்கத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமான இலாபம் கிடைக்கின்றது. ஆனால் அதனால் ஏற்படும் விபரீதம் 100 கோடிக்கு மேலாகப் பாதிப்பு ஏற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பல நோய்கள், குடும்பத் தகராறுகள், வாகன விபத்து, திருடர்கள் அதிகரிக்க மற்றும் சமூக ஒழுக்கக் கேடு ஏற்பட அதிக வாய் ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். Thinakkural
Post a Comment