பாகுபாடு காரணமாக தாம் ஏமாற்றமடைவதாக, இராஜாங்க அமைச்சர் Dr சுதர்ஷினி தெரிவிப்பு
பாகுபாடு காரணமாக, தாம் ஏமாற்றம் அடைவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
Hiru செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தாம் பெற்றுக்கொண்ட உரிப்புரிமையை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் தாம் மிகுந்த கவலையடைவதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டியுள்ளதால், தாம் மீண்டும் சுதந்திர கட்சியில் இணைவது குறித்து சிந்திக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
Post a Comment