இலங்கையில் முஸ்லீம்கள் வெளிப்படையாக, கருத்து தெரிவிப்பதற்கு அஞ்சுகின்றனர் - The Diplomat
இஸ்லாம் குறித்த அச்சத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களையும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும் ஒடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன -இதன் காரணமாக முஸ்லீம்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு அஞ்சுகின்றனர் என டிப்ளோமட்டில் தஸ்னிம் நசீர் எழுதியுள்ளார்.
தனது பெயரை குறிப்பிட விரும்பாத பெண், மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் புர்கா தடைக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக பொலிஸாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் இஸ்லாம் குறித்து அச்சத்தை ஏற்படுத்தும்- உடல்களை பலவந்தமாக தகனம் செய்யும் கொள்கைகள் போன்றவற்றினை வெளிப்படையாக விமர்சிப்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.
தாங்கள் இவற்றிற்கு எதிராக குரல்கொடுத்து சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தால், தாங்கள் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள இந்த பெண்கள், இலங்கையிலிருந்து வெளியேறுவது குறித்து சிந்திக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
https://thediplomat.com/2021/04/sri-lankan-muslims-fear-speaking-out/
Post a Comment