Header Ads



நாடு முடக்கப்படாது - வீடுகளிலே தங்கியிருக்க ​மக்களிடம் கோரிக்கை


அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திக்கொண்டிருக்கும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, வார இறுதியில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை. எனினும், வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு ​பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோனா நிலைமை குறித்து  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்  விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அதனையடுத்து  தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாது, ஆனாலும் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துகொள்ளவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.