ஒருபக்கம் சித்திரவதையின் உச்சம் - அனைத்தையும் மறந்தாலும் குர்ஆன் வசனங்களை இன்னமும் ஞாபகம் வைத்துள்ளார்
இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் இதயத்தில் இனம் தெரியாத வலி. அதன் பின்னணியை வாசித்த போது இதயம் கண்ணீர் விட்டு அழுதது.
படத்தில் உள்ள இவரின் பெயர் மன்சூர் ஷஹாதீத், பலஸ்தீன முஸ்லீம், 17 வருடம் இஸ்ரேலிய சிறைச்சாலையில் கடும் சித்திரவதைக்கும், பலவந்த தனிமைபடுத்தலுக்கும் ஆளாகியதால் மனநிலை பாதிக்கவைக்கப்பட்டவர். இஸ்ரேலிய இனவாத சக்தியின் கொடூர கொடுமைப்படுத்தல் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட அவர், தனது தாய் மற்றும் சொந்த குடும்ப அங்கத்தவர்களை கூட அடையாளம் காண முடியாத நிலையில் மனநிலை பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
தினமும் பலஸ்தீன முஸ்லீம்கள் இஸ்ரேலிய இனவாத சக்தியால் திட்டமிட்ட ரீதியில் இனஅழிப்பு, சித்திரவதை செய்யப்பட்டுகொண்டிருக்கிற நிலையில் பல முஸ்லீம் நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை உருவாக்கி வருகின்றமை இஸ்ரேலின் இனஅழிப்பு கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது
பல முஸ்லீம் நாடுகளின் தலைவர்களின் கையால் ஆகாத தனத்தாலும் உம்மாவின் ஒற்றுமை இன்மையாலும் தினமும் அழுவது பலஸ்தீனம் மட்டுமல்ல..
2020 ஆம் ஆண்டு மாத்திரம் 41 பெண்கள் 160 சிறுவர்கள் உட்பட 4400 பலஸ்தீன் மக்களை இஸ்ரேல் சிறைப்படுத்தியது.
1993 ஒஸ்லோ ஒப்பந்தம் தொடக்கம் 1 ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் இதில் 2000 பெண்களும் 17500 சிறுவர்களும் அடங்குவர்.
நமது புனித மஸ்ஜித்தை மீட்பதற்காக போராடும் முஸ்லீம்களையும் அதற்காக சிறையில் வாடும் நமது சகோதர சதோதரிகளையும் புனித ரமலான் மாதத்தில் நமது துஆக்களில் உள்ளடக்கு வோமாக!
இதில் காஸாவில் வாழும் எனது நண்பர் மூலம் இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டது. அனைத்தையும் மறந்துள்ள இவர் சிறையில் இருந்த போது மனனம் செய்த அல்குர் ஆண் வசனங்களை இன்னமும் ஞாபகம் வைத்துள்ளார் என்பதுதான். சுப்ஹானல்லாஹ்
-அய்யாஷ்
Post a Comment