Header Ads



சஹ்ரானின் செயலினால்தான் முஸ்லிம்களுக்கு இந்நிலை - கும்புருகமுவ தேரர்


- Ashraff A Samad -

கும்புருகமுவ தேரர்  கடந்த காலங்களில் காலம் சென்ற சபாநாயகார், எம்.எச்.எம். முஹம்மதும் நீங்களும் இணைத்தலைமையாகக் கொண்டு பல்வேறு நல்லிணக்க பௌத்த -முஸ்லிம்  நிகழ்வுகளை நடாத்தியதையும் 10 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதையும் ஞாகபபடுத்தினேன். 

இறுதியாக மாருதானை மாளிகாகந்தையில் பண்சலை நோன்பு திறப்பதற்கும் அங்கு வசதிகளை ஏற்படுத்தினீா்கள், அதன் பிறகு எம்.எச். முகம்மது இஸ்லாமிய நிலையத்தில், இந்த நாட்டில் பிரதான நாயக்க ஆமதுருக்களை அழைத்து மாளிகவத்தை இஸ்லாமிய நிலையத்தில் காலை உணவு வழங்கியதையும் ஞாகப்படுத்தினேன். 

அரபு பேராசிரியா்கள் உலக முஸ்லிம் லீக் உறுப்பிணா்களை அழைத்து தாஜ் ்கோட்டலிலும் அலரிமாளிகையிலும் அரபு பௌத்த மாநாடுகளை நடத்தியதையும் அவருக்கு ஞாகபமூட்டினேன்.  அவா் கூறுகையில் மறைந்த எம்.எச். முகம்மது பொரளையில் பல்வேறு சேவைகளைச் செய்தாா் அவருடன் நிறைய பௌத்தா்கள் ஆதரவாக இருந்தாா்கள்.  அவர் இறந்த பிறகு அவருடைய புதல்வகள் ஹூசைன்முகம்மத் போன்றவா்கள் அவரது தந்தையின் அடிச்சுவட்டினை பின்தொடரவில்லை இல்லாவிட்டால் இஸ்லாமிய நிலையம் ஊடாக பல்வேறு பௌத்த முஸ்லிம் நல்லிணக்க அமைப்பினை தொடர்ந்து சென்றிருக்க முடியும். என கவலையாகக் கூறினாா்.  

தனக்கு தற்பொழுது இம் மாதத்துடன் 90 வயதினை தான்டிவிட்டது. சஹ்ரான் செய்த இந்த செயலினால் தான் இந்த நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு இப்படியானதொரு நிலை அதற்காகவே இன்று தெகிவளை ஜூம்ஆப் பள்ளியில் இன்று -04- கூடிய பிரதான கதீப்மாா்களிடம் உரையா்ற்றினாா் வெள்ளிக்கிழமைகளில் ஜம்ஆப் பிரசங்கம் நிகழ்த்தும்போது இளைஞா்களை சிறந்த முறையில் நல்லதொரு சமுதாயமாக அவா்களுக்கு உபதேசம் செய்யுங்கள் முஹம்மத் நபி இவ் உலகிக்கு முன்மாதியானவா் அவரது வாழ்க்கை முறையை ஒழுங்காகப் பின்பற்றினால் போதும் நாம் சீராக வாழ்வதற்கு விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, இறக்கம். மிக்கவா்  என பேராசிரியரும் கடந்த 30 வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வேந்தராகவும் மருதானை மாளிகாந்தை பிரிவினை பிரதான தேரா்  கும்புருகமுவ தேரா் என்னிடம் உரையாடினாா்.

No comments

Powered by Blogger.