"புத்தளம்” என்ற சொல்லுக்கு களங்கம் ஏற்படுத்தும் ஊடகங்கள் - ஊடக அமைச்சருக்கு கடிதம்
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொதுவாக இலங்கையில் ஒரு சம்பவம் நடைபெற்றால் அது எந்த ஊரில் நடக்கின்றதோ அந்த ஊரின் பெயர் தடிப்பாக சொல்லப்படுவதும் அதனை தொடர்ந்து அந்த மாவட்டத்தின் பெயர் விரிவான செய்தியில் சொல்லப்படுவது தான் வழக்கம்.
ஆனால் புத்தளம் மாவட்டத்தில் எந்த இடத்தில் ஒரு சம்பவம் நடந்தாலும், அந்த இடங்களின் பெயர்கள் மறைக்கப்பட்டு “புத்தளம்” என்ற பெயர் மாத்திரம் தலைப்பில் போடுவது நம் நாட்டில் இருக்கும் ஊடங்களில் செயலாக இருந்துவருகின்றது.
இலங்கையில் இருக்கும் மாவட்டங்களில் மிக மோசமான மாவட்டம் புத்தளம் என்ற பார்வை நாளாந்தம் புத்தளம் மீது பூசப்பட்டு வருவதை தடுப்பதற்காக நகர்வுகளை நாம் முன்னெடுத்தோம்.
மிக்க கொடூரமான பஸ் விபத்து ஒன்று பதுளை மாவட்டத்தில் நடைபெற்றது. ஆனால் அந்த செய்தியின் தலைப்பு “லுணுகலயில் பஸ் விபத்து” என்றே போடப்பட்டிருந்தது. இது மாத்திரமல்ல எல்லா செய்திகளிலும் பொதுவாக இப்படித்தான் எழுதப்படும்.
ஆனால் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் அது தலைகீழாய் நடப்பதை நீங்கள் காணலாம். புத்தளம் மாவட்டத்தில் எங்கு எது நடந்தாலும் “புத்தளம் மாவட்டத்தின் பெயரை தலைப்பில் சேர்க்காமல், விரிவான செய்தியில் அவற்றை ஏனைய செய்திகள் போல வெளியிட வேண்டும்” என்று நாம் இலங்கையில் இருக்கும் அனைத்து ஊடகங்களுக்கும், ஊடக அமைச்சுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
Thanks,
SM Isham Marikar
Post a Comment