வெளிநாட்டுக்கு ஓடிய மைத்திரி மீண்டும் தேர்தலில் போட்டியா..? சட்ட நடவடிக்கை கோருகிறார் மல்கம் ரஞ்சித்
ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்கும் என்ற உடனடி தகவல் கிடைத்த போதிலும், தனது பொறுப்புகளை புறக்கணித்து வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாராகின்றாரா? என கொழும்பு பேராயர் இன்று (4) கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கள் கடமைகளை மறந்து, மக்களின் இறப்பை அனுமதித்தவர்கள் மறுதேர்தலுக்குத் தயாராக இருப்பது வெட்கக்கேடானது என்றும் பேராயர் கூறினார்.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையான இன்று பல தேவாலயங்களுக்கு விஜயம் செய்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஊடகங்களுக்கு இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தக்கூடாது என்றும் கூறினார்.
அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் ஏன் பல மாதங்கள் மற்றும் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றன என்று கேள்வி எழுப்பிய அவர், தாமதப்படுத்தாமல் பரிந்துரைகளை விரைவாக செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். IBC
Post a Comment