Header Ads



கொரோனா பாதித்த பெண்னை, திருமணம் செய்த மாப்பிள்ளை


2-வது கட்ட கொரோனா  அலையில் சிக்கி பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த கொரோனா நெருக்கடிக்கிடையிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக சுபமுகூர்த்த நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இன்று ஏராளமான முகூர்த்த நாட்கள். ஊரடங்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

கேரளாவில் கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று -25- ஒரு தம்பதிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு இருவீட்டாரும் ஏற்பாடு செய்து வந்த நிலையில், மணமகனுக்கு கொரோனா பாசிட்டிவ். இதனால் ஆலப்புழா மெடிக்கல் காலேஜ்- மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்

திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுவிட்டதே, என இருவீட்டாரும் கவலையடைந்தனர். ஆனால், மணமகள் குறிப்பிட்ட நாளில் நாளில் திருமணம் நடைபெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதனால் மாவட்ட கலெக்டரிடம் சிகிச்சை பெற்று வரும் மணமகனை திருமணம் முடிக்க அனுமதி கேட்டுள்ளார்.  அவரும் அனுமதி கொடுக்க, மணமகள் இன்று பிபிஈ கிட் அணிந்து மருத்துவமனைக்கு வந்து மணமகனை திருமணம் செய்து கொண்டார். Thinakkural

No comments

Powered by Blogger.