முஸ்லிம் அடிப்படைவாத கொள்கையை, பதிவேற்றிய பொது சுகாதார உத்தியோகத்தர் கைது
முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பின் கொள்கைகளை முகநூலில் பதிவு செய்து வந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை இன்று மாலை (02) குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 3 மாத கால பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காத்தான்குடியில் பொது சுகாதார உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் 38 வயதுடைய குறித்த நபர் முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் அடிப்படைவாத கொள்கைகளை முகநூலில் தரவேற்றி வந்ததுடன் அந்த அமைப்புடன் தொடர்புகளை பேணிவந்த நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (02) அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 3 மாத பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-
அரசாங்கம் யாரையும் கைதுசெய்துவிட்டு இஸ்லாமிய அடிப்படைவாதம் என லேபிள் ஒட்டினால்போதும் என நினைக்கிறது. அரசாங்கம் முதலில் பாரம்பரியமற்ற இஸ்லாம், இஸ்லாமிய அடிப்படை வாதம், அடிப்படைவாத அமைப்புகள் இஸ்லாமிய அடிப்படை வாத நூல்கள் பதிவுகள் ஒலிப்பதிவுகள் என எவற்றை கருதுகின்றது என்பதை தெளிவுபடுத்த வேணும். பின்னர் அவைதொடர்பாக முஸ்லிம் மத அரசியல் தலைவர்களோடு உரையாடவேண்டும். அதை விடுத்து காட்டாச்சி தனமாக கைது செய்வதை கண்டிக்கிறேன். பாரம்பரிய முஸ்லிம் என்பதை சில அறிக்கைகளில் வஹாபிசம் என குறிப்பிடுகிறார்கள். இது பொத்தாம் பொதுவான ஒரு வகைப்படுத்தலாகும். பொது அடையாளத்தின் அடிப்படையில் கைது செய்வதை தேசிய சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாது. மறுபுறத்தில் வஹாபிசம் தொடர்பாக தீவிர சிங்கள பெள்த்தவாதிகள் மத்தியில் மட்டுமன்றி ஈஸ்ட்டர் தாக்குதலின்பின் கிழக்குமாகாண தமிழர் மத்தியிலும் உலகின் சில நாடுகளிலும் அச்சம் வளர்ந்து வருகிறதையும் குறிப்பிட்டுஆக வேண்டும். முஸ்லிம் மக்கள் ஓரணியாக நின்று குற்றச்சாட்டுக்கு வகையில்லாத வகையில் உரையாடல்களையும் செயற்பாடுகளையும் ஆரம்பிக்க வேண்டும் இனியும் தாமதிக்கக்கூடாது.
ReplyDeleteஅரசாங்கம் யாரையும் கைதுசெய்துவிட்டு இஸ்லாமிய அடிப்படைவாதம் என லேபிள் ஒட்டினால்போதும் என நினைக்கிறது. அரசாங்கம் முதலில் பாரம்பரியமற்ற இஸ்லாம், இஸ்லாமிய அடிப்படை வாதம், அடிப்படைவாத அமைப்புகள் இஸ்லாமிய அடிப்படை வாத நூல்கள் பதிவுகள் ஒலிப்பதிவுகள் என எவற்றை கருதுகின்றது என்பதை தெளிவுபடுத்த வேணும். பின்னர் அவைதொடர்பாக முஸ்லிம் மத அரசியல் தலைவர்களோடு உரையாடவேண்டும். அதை விடுத்து காட்டாச்சி தனமாக கைது செய்வதை கண்டிக்கிறேன். பாரம்பரிய முஸ்லிம் என்பதை சில அறிக்கைகளில் வஹாபிசம் என குறிப்பிடுகிறார்கள். இது பொத்தாம் பொதுவான ஒரு வகைப்படுத்தலாகும். பொது அடையாளத்தின் அடிப்படையில் கைது செய்வதை தேசிய சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாது. மறுபுறத்தில் வஹாபிசம் தொடர்பாக தீவிர சிங்கள பெள்த்தவாதிகள் மத்தியில் மட்டுமன்றி ஈஸ்ட்டர் தாக்குதலின்பின் கிழக்குமாகாண தமிழர் மத்தியிலும் உலகின் சில நாடுகளிலும் அச்சம் வளர்ந்து வருகிறதையும் குறிப்பிட்டுஆக வேண்டும்.இதனை நல்லிணக்க உரையாடல்கள் மூலமே தீர்க்க முடியும். முஸ்லிம் மக்கள் ஓரணியாக நின்று குற்றச்சாட்டுக்கு வகையில்லாத வகையில் உரையாடல்களையும் செயற்பாடுகளையும் ஆரம்பிக்க வேண்டும் இனியும் தாமதிக்கக்கூடாது.
ReplyDeleteIt is a series of drama from government side, this is the todays episode.
ReplyDelete