கொரோனா நோயாளிகளின் உடல்கள், குப்பை வேனில் எடுத்துச் செல்லப்பட்ட அவலம்
சத்தீஸ்கரில் குப்பை கொண்டு செல்லும் வேனில் இறந்த கரோனா நோயாளிகளின் உடல் கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் டோங்கர்கான் பகுதியில் நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். சிகிச்சையின் போது ஆக்ஸிஜன் கிடைக்காததால் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்த நான்கு கரோனா நோயாளிகளின் உடலை தகனம் செய்வதற்கு உடல்களை எடுத்துச்செல்ல குப்பை வேன் பயன்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
'மாவட்டத்தில் ஒரு கரோனா மையத்தில் மூன்று பேர், மற்றொரு கரோனா மையத்தில் ஒருவர் என நேற்று நான்கு பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். மூவருக்கு ஆக்சிஜன் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. நான்காமவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் உடல்கள் வேனில் எடுத்துச் செல்லப்பட்டதற்கு நகரப் பஞ்சாயத்துதான் காரணம். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் மிதிலேஷ் சௌவுத்ரி தெரிவித்தார்.
Post a Comment