புற்றுநோய் உணவு பொருட்கள் உள்ளதாக கூறிய சித்திகாவுக்கு சிக்கல்
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திகா சேனாரத்ன வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வகையிலான காரணிகள் அடங்கிய மேலும் சில உணவு பொருட்கள் உள்ளதாக தெரிவித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பதால் அந்த தகவலை வெளியிட முடியாது என்ற தெரிவித்த அவரது கருத்தினை அரசாங்கம் ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அவரது கருத்து தொடர்பில் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படும் என்றும் இது தொடர்பாக அரசாங்கத்தால் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவரை அவர் உண்மை பேசினார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை விசாரித்து பதவி நீக்கம் செய்தால்,இந்த நாட்டின் பொதுமக்களுககு அரசாங்க ஆதரவில் நஞ்சு கொடுத்துவிட்டு அந்த கசப்பான உண்மையை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.
ReplyDelete