Header Ads



"மஹ்ரூம்களை மறந்து விடாதீர்..."


எட்டுக் கூட்டத்தினர் மட்டுமே ஸகாத் பெறத் தகுதியானவர்கள் என வரையறுத்துக் கூறும் அல்-குர்ஆன், அவர்களை இரு குழுக்களாகப் பிரித்து அடையாளப்படுத்துகிறது.

"அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.

யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு)."

(அல்குர்ஆன் : 70:24,25)

இவ்வசனத்தில், "ஸாஇல் - கேட்டு வருவோர்" என ஒரு சாராரையும், "மஹ்ரூம் - தேவை இருந்தும் அவற்றை வெளிப்படுத்தாதோர்" என மற்றொரு சாராரையும் அல்-குர்ஆன் அடையாளப்படுத்தி உள்ளது. 

ஸகாத் நிதியங்களும், தனியாக ஸகாத் வழங்குவோரும் கேட்டு வருபவர்களுக்கே பெரும்பாலும் ஸகாத் நிதியில் இருந்து வழங்கி வருகின்றனர். அல்-குர்ஆன் குறிப்பிடும் "மஹ்ரூம்கள்" பெரும்பாலும் யாராலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. 

இரண்டு வருடங்கள் ஸகாத் நிதியம் ஒன்றின் தலைவராக கடமையாற்றிய எனது அனுபவத்தில், "மஹ்ரூம்" எனப்படுவோர், பெரும்பாலும் மார்க்கத்தில் இறுக்கமான பற்றுள்ளவர்களாகவும், குறைந்த தொகையினை மாதாந்த வருமானமாகப் பெற்றுவரும் ஆலிம்களாகவும் இருக்கக் கண்டேன்.

இந்த நாட்களில் (2021) முப்பதாயிரத்தைவிடக் குறைந்த மாதாந்த வருமானமுள்ள குடும்பஸ்தர்கள் யாவரும் அனேகமாக ஸகாத் பெறத் தகுதியான "மிஸ்கீன்" என்ற பிரிவின்கீழ் வந்து விடுவர். எனவே தனியாக ஸகாத் வழங்குவோரும், ஸகாத் நிதியங்களும் மஹ்ரும்களையும் கொஞ்சம் தேடிப்பாருங்கள். 

ஹலாலா தேவைகளுக்காக கடன் பெற்று அவற்றைத் திருப்பிச் செலுத்திக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருப்போரையும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்போரையும் கண்டு கொள்வீர்.  

- இர்ஷாத் மூமீன் -

No comments

Powered by Blogger.