Header Ads



வெடி பொருட்களை கண்டறியும் மோப்ப நாய்களுக்கான மிருக வைத்தியசாலை திறப்பு


வெடி பொருட்களை கண்டறியும் இராணுவத்தை சேர்ந்த மோப்ப நாய்களுக்காக கள பொறியியல் படையணியின் கே9 பிரிவில் ஸ்தாபிக்கப்பட்ட மிருக வைத்தியசாலை கள பொறியியல் படையணி பிரதம பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகரவினால் திறந்துவைக்கப்பட்டது.

அறுவைசிகிச்சை வசதி, தயார்படுத்தல் பிரிவு, மீட்டல் பிரிவு மற்றும் வார்டு என்பவற்றை கொண்ட இந்த மிருக வைத்தியசாலையில் அல்ட்ரா செளன்ட் ஸ்கேனிங், எலக்ட்ரோ கார்டியோகிராஃப் யூனிட் மற்றும் டிஜிட்டல் ரேடியோ வரைபட வாசிப்பு என்பவற்றை மேற்கொள்ளும் வசதிகளையும் கொண்டுள்ளது.pic 036இதேவேளை, பூ ஓயாவில் வெடி பொருட்களை கண்டறியும் இராணுவத்தை சேர்ந்த 24 மோப்ப நாய்களும் அவற்றை கையாளும் 29 இராணுவ வீரர்களும் தமது பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வெளியேறினர்.

இந்த நிகழ்வில் கள பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



No comments

Powered by Blogger.